பயிர்க் காப்பீடு வழங்காததை கண்டித்து கூட்டுறவு வங்கி முற்றுகைSponsored ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சிய பகுதியாகத் திகழ்வது திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்கள் ஆகும். அத்தைகைய கிராமங்களில் இந்தாண்டு கடும் வறட்சி நிலவியதால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இவர்களைப் பாதிப்பிலிருந்து மீட்க தமிழக அரசு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தது. தமிழக அரசின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நம்பி இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களின் பயிர்களைக் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தனர். இந்நிலையில்  திருவாடானை தாலுகாவில் ஓரிக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்குட்பட்ட 14 கிராமங்களுக்குப் பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இந்த வருட காலத்திற்கு பயிர்க் காப்பீடு வரவில்லை என்று வங்கி நிர்வாகிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த வங்கியில் பயிர்க்காப்பீடு செலுத்திய 14 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு ஓரிக்கோட்டை  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து இப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது. அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்குப்பின் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Sponsored


இதேபோல் நெய்வயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட 13 கிராமங்களுக்கும் விவசாயிகள் செலுத்திய பயிர்க் காப்பீட்டு தொகைக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நெய்வயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட முயன்றவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Sponsored
Trending Articles

Sponsored