மீண்டும் கடிதப் போக்குவரத்து! மாணவர்களை ஊக்குவிக்கும் போட்டிSponsoredபோன் மற்றும் சமூக வலைதளங்கள் வந்தபிறகு, கடிதம் எழுதும் பழக்கம் நம்மிடையே முற்றிலும் அருகிப்போய்விட்டது. அந்தப் பழக்கத்தைத் திரும்பவும் கொண்டு வரும் முயற்சியாக கரூரில் உள்ள மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் பள்ளி மாணவர்களுக்குக் கடிதம் எழுதும் போட்டியை அறிவித்திருக்கிறது.

 
 

வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தக் கடிதம் எழுதும் போட்டியை அந்தச் சங்கம் அறிவித்திருக்கிறது. மாணவர்கள் தாங்கள் எழுதும் கடிதங்கள் அனுப்ப, வரும் 10-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சங்கத்தின் தலைவர் மேலை.பழனியப்பன் இந்தக் கடிதம் எழுதும் போட்டி சம்பந்தமாக விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

"வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை மீண்டும் ஏற்படுத்தவும், சுதந்திரம் மற்றும் நாட்டின் மொழிப்பற்றை வளர்க்கும் விதமாகக் கடிதம் எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுத வேண்டும். மேலும், கடிதம் எழுதும் முறைகளைப் பின்பற்றிக் கையெழுத்துகள் தெளிவாகவும் நேர்த்தியாகவும் கடிதத்தை எழுதி இருத்தல் வேண்டும். மாணவ மாணவிகளால் மட்டுமே கடிதம் எழுதப்பட வேண்டும். அதற்கு சான்றாக வகுப்பு ஆசிரியர் கையெழுத்து பெற்று கடிதத்தை அனுப்ப வேண்டும். பின்கோடு தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

கடிதத்தின் தலைப்பானது மகள் அல்லது மகன் தனது தாயாருக்கு எழுதுவதாக இருக்க வேண்டும். யாரேனும் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகத் தலைவரை நினைவுகூர்ந்து,'பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து நாடு,மொழிப்பற்றுடன் திகழ்வேன்' என உறுதிமொழியேற்கும் வகையில் கடிதம் எழுதினால் போதும். கடிதங்களை வரும் 10-ம் தேதிக்குள், லயன்ஸ் கடிதப் போட்டி,72,சீனிவாசபுரம்,கரூர்-639002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதில் வெற்றிபெறும் 10 மாணவ மாணவிகளுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று ரூ.250 மதிப்புள்ள புத்தகங்கள், அடுத்த பத்து மாணவர்களுக்கு ரூ.150 மதிப்புள்ள புத்தகங்கள், மூன்றாம் நிலையில் வரும் பத்து மாணவர்களுக்கு ரூ.100 மதிப்புள்ள புத்தகங்களும் பரிசாக வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.  

Sponsored                                                                                                                                                                                         

Sponsored Trending Articles

Sponsored