கிராஃப்ளிங் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழாSponsoredஅகில இந்திய அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடந்த கிராஃப்ளிங் மல்யுத்தப் போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்ற மாணவிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது.

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருபவர் பூவினமாரி. இவர் படிப்புடன் கிராஃப்ளிங் எனப்படும் மல்யுத்தப் போட்டியிலும் சிறந்த வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். தமிழ்நாடு அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார்.

Sponsored இதைத் தொடர்ந்து டெல்லியில் நடந்த தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிட்டியது. இதில்  59 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இவர் இறுதிப் போட்டியில் சில புள்ளிகளை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். இதேபோல் 65 கிலோ எடைக்கு உட்பட்ட பிரிவில் பங்கேற்ற பூவினமாரி வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றார்.

Sponsored


வெள்ளி, வெண்கலம் என பதக்கங்கள் பெற்று சாதனை படைத்த மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி பூவினமாரி ஊர் திரும்பியதை அடுத்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் மாணவி பூவினமாரியையும், இந்தச் சாதனையைப் படைக்க உதவியாக இருந்த பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் கஜேந்திரனையும் தலைமை ஆசிரியர் சிராஜுதின் அகமது, உதவித் தலைமை ஆசிரியர் பாக்கியலெட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டிப் பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.Trending Articles

Sponsored