கடலில் விடப்பட்ட புள்ளி சுறா இறந்த நிலையில் மீண்டும் கரை ஒதுங்கியது!Sponsoredகடந்த 2 நாள்களுக்கு முன் உயிருடன் கரை ஒதுங்கிய புள்ளி சுறா கடலில் விடப்பட்டதை அடுத்து இன்று இறந்த நிலையில் மீண்டும் கரை ஒதுங்கியது.

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள வேதாளை கடற்கரைப் பகுதியில் கடந்த 12-ம் தேதி சுமார் 100 கிலோ எடை கொண்ட புள்ளி சுறா கரை ஒதுங்கியது. பிறந்து 5 ஆண்டுகளே ஆன பெண் இனத்தைச் சேர்ந்த இந்த சுறா சுமார் 10 அடி நீளம் இருந்தது. உயிருடன் கரை ஒதுங்கிய இந்தப் புள்ளி சுறா பற்றிய தகவல் அறிந்த மண்டபம் வன உயிரின பாதுகாப்பு அலுவலர்கள் வேதாளைக்குச் சென்று அந்த சுறாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன்பின் தனியார் படகின் மூலமாக இந்த புள்ளி சுறா இழுத்துச் செல்லப்பட்டு கரையில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆழ்கடல் பகுதியில் விடப்பட்டது.


 

Sponsored


இந்நிலையில், கடலில் விடப்பட்ட அந்த சிறிய புள்ளி சுறா இன்று மீண்டும் மண்டபம் அருகே உள்ள  மரைக்காயர் பட்டினம் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. தகவலறிந்த வன உயிரின பாதுகாவலர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு பிரிவினர் கரை ஒதுங்கிய புள்ளி சுறாவை மீட்டு அதன் உடலை கூறாய்வு செய்தபின் கடற்கரை பகுதியில் புதைத்தனர்.

Sponsored


அரிய கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கமாகத் திகழும் மன்னார் வளைகுடா பகுதியில் 3600-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. மாறி வரும் பருவ நிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இவற்றில் பல நூறு உயிரினங்கள் அருகி வரும் உயிரினங்களாக மாறி வருகிறது. இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் விழிப்பு உணர்வு குறைவால் அருகி வரும் கடல் வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே உள்ளன.Trending Articles

Sponsored