கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்!Sponsoredகரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான நேற்று, கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கோம்புபாளையம் ஊரட்சியில், நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். கூட்டத்தில், தனிநபர் கழிப்பறை இல்லாதோர் விவரப் பட்டியல் தயாரித்தல், தனிநபர் இல்லக் கழிப்பறை கட்ட தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு 12,000 ரூபாய் மானியம் அரசு திட்டங்களின்மூலம் வழங்கப்படுவதுகுறித்து தெரிவிக்கப்பட்டன. பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்படுத்துவதை உறுதிப்படுத்துதல், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்குப் பாராட்டு தெரிவித்தல், திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்ட ஊராட்சிகளில் கட்டப்பட்ட கழிப்பறைகளைத் தொடர்ந்து பயன்படுத்தவைத்தல் போன்றவைகுறித்து ஆலோசிக்கப்பட்டன. குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த, ஊரகப் பகுதிகளில் கொசுக்கள்மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை விழிப்பு உணர்வுடன் மேற்கொண்டு, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


 

மேலும், அந்தியோதையா இயக்கம், கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொதுச் செலவினம் தொடர்பாக விவாதிக்கப்பட்டன. ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களின் பராமரிப்பு மற்றும் அவற்றின் செயல்பாடுகுறித்தும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள்குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதிச் செலவின விவரங்கள்குறித்தும் விவாதிக்கப்படன. மேலும், மகளிர் திட்டம் சுய உதவிக் குழுக்கள் வரவு-செலவு அறிக்கை கிராம சபைகளில் தெரிவிக்கப்பட்டன. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், வரிவசூல் முன்னேற்றம் ஆகியவைகுறித்தும் சுதந்திர தினமான இன்று கிராம சபைக் கூட்டத்தில் விவாதப்பொருளாக வைத்து பேசப்பட்டன" என்று தெரிவித்தார்.

Sponsored


இதற்கு முன்பாக, 2022-ம் ஆண்டு புதிய இந்தியா உருவாக்கப்படுவதற்கான உறுதிமொழியை மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
 

Sponsored
Trending Articles

Sponsored