ராமநாதபுரத்தில் மாநில விளையாட்டு ஆணைய ஹாக்கி போட்டி!Sponsoredதமிழக விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் விளையாட்டு விடுதிகளுக்கு இடையேயான மாநில அளவிலான ஹாக்கிப் போட்டிகள் ராமநாதபுரத்தில் இன்று தொடங்கியது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2017-18-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் விளையாட்டு விடுதிகளுக்கு இடையேயான ஹாக்கிப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ஐந்து நாள்கள் நடைபெறுகிறது.

ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு விடுதியின் அணிகள் பங்கேற்க உள்ள இந்த ஹாக்கிப் போட்டி இன்று தொடங்கி 22-ம் தேதி வரை 5 நாள்கள் நடக்கிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி  மாநில அளவில் நடைபெற உள்ள குடியரசு தின விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி பெறும்.

Sponsored


Sponsored


ராமநாதபுரத்தில் இன்று துவங்கிய இந்த ஹாக்கிப் போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் நடராஜன் தொடங்கிவைத்தார். முன்னதாக இப்போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர் ''போட்டிகளில் பங்கேற்பவர்கள் தங்கள் முழுத்திறனையும் நேர்மையான விளையாட்டு மாண்புடன் வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பிராங்பால் ஜெயசீலன், மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் அனைத்து அணிகளின் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.Trending Articles

Sponsored