என் பையனுக்கு பேர் வச்சது ஆர்யா! – நெகிழும் ’தலையணைப் பூக்கள்’ ஆனந்திSponsoredஎங்க வீட்டு மாப்பிள்ளை’ ஷோ மூலம் திருமணம் செய்துகொள்ளப்போவதாகச் சொன்ன ஆர்யா, கடைசியில் ஷோவில் கலந்துகொண்ட எந்தப் பெண்ணையும் கைபிடிக்காமல், ‘கொஞ்சம் அவகாசம் வேண்டும்’ என எஸ்கேப் ஆனது அனைவரும் அறிந்ததே.

அந்த ஷோவுக்குப் பிறகு, திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைப் பெரும்பாலும் தவிர்த்துவருகிறார். ‘நீங்க எப்போ’ என வழக்கமாகக் கேட்கப்படும் கேள்வியுடன் இந்த ஷோ குறித்த பேச்சுக்களும் சேர்ந்துகொள்ள, அதிலிருந்து தப்பிக்கவே இதைச் செய்தார் ஆர்யா.

Sponsored


கல்யாணங்களில் கலந்துகொள்வதில்லை. ஆனால், பெயர் சூட்டு விழாவில் கலந்துகொள்ளக் கூடாதென இருக்கிறதா? பெயர் சூட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டதோடு, குழந்தைக்குத் தன் பெயரையே சூட்டியும் மகிழ்ந்திருக்கிறார். ‘மீகாமன்’ படத்தில் நடித்த ‘தலையணைப் பூக்கள்’ ஆனந்தியின் குழந்தைக்கு நடந்த பெயர் சூட்டு விழா அது.

Sponsored


‘என்னோட கணவரும் ஆர்யாவும் சோஷியல் மீடியாவுல நல்ல ஃப்ரெண்ட்ஸ். அந்தத் தொடர்புல, ‘எங்க பையனுக்கு நீங்கதான் பேர் வைக்கணும்னு கூப்பிட்டோம். உடனே சம்மதிச்சு வந்து, ’ஆர்யவீர்’னு பெயர் சூட்டினார்’ என்ற ஆனந்தி, இதேபோல அவர் வீட்டுல நடக்கிற ஃபங்ஷன்ல கலந்துக்கிடணும்கிறதுதான் என் விருப்பமும் என் கணவர் விருப்பமும் கூட’ என்கிறார்.Trending Articles

Sponsored