`மனுஷன்னா வைராக்கியம் இருக்க வேணாமா?' - வெளியானது `மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தின் ஸ்னீக் பீக்!நடிகர் விஜய் சேதுபதி தயாரித்துள்ள `மேற்குத்தொடர்ச்சி மலை' படம், ஆகஸ்ட் 24-ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், தற்போது படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. 

Sponsored


நடிகர் விஜய் சேதுபதி தயாரித்துள்ள திரைப்படம்தான், `மேற்குத்தொடர்ச்சி மலை'. இணை இயக்குநராகப் பணிபுரிந்த லெனின் பாரதி இயக்குநராகக் களமிறங்கி, 'மேற்குத்தொடர்ச்சி மலை'ப் பகுதியில் வாழ்கின்ற நிலமற்ற உழைக்கும் மக்களின் கதையை இப்படத்தில் எடுத்துரைத்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் உருகவைக்கும் இசையில், இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப்பெற்றது. பல்வேறு நாடுகளின் சினிமா விழாக்களிலும் திரையிடப்பட்டு விருதுகளைக் குவித்த இப்படம், வரும் 24-ம் தேதி உலகெங்கும் ரிலீஸாக உள்ளது. இதையொட்டி, படத்தை புரொமோஷன் செய்யும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி, ``இது எளிய மக்களுக்கான படம். ஒரு அழகான வாழ்வியல் மூலமா படம் சொல்லப்பட்டிருக்கிறது. படம் ரொம்ப அழகா வந்துருக்கு. என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரி ஒரு படம் பண்ணுனதுல ஆத்ம திருப்தியோட இருக்கேன்" என நெகிழ்ந்து கூறியிருந்தார். 

Sponsored


படத்தின் டிரெய்லரைத் தொடர்ந்து, தற்போது 2 நிமிட காட்சிகள்கொண்ட ஸ்னீக் பீக் வெளியிடப்பட்டது. அதில், தேனி மக்களின் பேச்சு வழக்குடன் கூடிய இயல்பான வசனங்களும், மலைப் பகுதிகளில் வசிக்கும் சுமைதூக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை விவரிக்கும் விதமாகக் காட்சிகள் அமைந்துள்ளன.

Sponsored
Trending Articles

Sponsored