மக்களுக்காகப் போராடினால் அர்பன் நக்சலா, உங்கள் கருத்து என்ன? #VikatanSurveySponsored``தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் மத்தியக் குழுவோடு தொடர்புகொண்டிருப்பவர்கள், நகர்ப்புற நக்சல்கள் (அர்பன் நக்சல்). வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்திய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக மாவோயிஸ்டு அமைப்புகள் பெரிய சதியில் ஈடுபட்டுள்ளன. தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்களுக்கு இச்சதித் திட்டத்தில் பங்கு இருக்கிறது. இதற்கு வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன’’ என்கிறது மஹாராஷ்டிர போலீஸ்.

இடதுசாரி கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் அருண் பெரேரா, வெர்னோன் கொன்சால்வேஸ், டெல்லி சட்டப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுதா பரத்வாஜ், அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான கௌதம் நவ்லகா ஆகியோர் கைது செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத் தலையீட்டால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Sponsored


இவர்களுக்கு ஆதரவாக, `மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்களை `அர்பன் நக்சல்' என்று முத்திரை குத்துவதா?' என நாடு முழுவதும் ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளன. `நானும் அர்பன் நக்சல்தான்’ என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், `அர்பன் நக்சல்கள் என்பது உண்மைதான். அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும்' என்றும் இன்னொரு பக்கம் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. சரி, இந்த விஷயம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Sponsored


உங்கள் கருத்துகளையும் இங்கே பதிவு செய்யுங்கள்..

loading...Trending Articles

Sponsored