"நீ நினைக்கிற கனவுக் கன்னி நான் இல்லைப்பா!" - செம கலாய் பிரியா பவானி ஷங்கர்Sponsoredதிருத்தமான செய்தி வாசிப்பாளர், ஆண்களையும் சின்னத்திரை சீரியல் பார்க்கவைத்த கதாநாயகி. `மேயாத மான்', `கடைக்குட்டி சிங்கம்' உள்ளிட்ட படங்களின்மூலம் மனதைக் கொள்ளைகொண்ட `பக்கத்துக்கு வீட்டுப் பெண்'... இப்படி, பல பரிணாமங்களில் கவர்ந்தவர் பிரியா பவானி ஷங்கர். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவுசெய்த ஒரு புகைப்படம் அவரை எமோஷனாக்கியுள்ளது. 

                                                                        

என்றைக்குமே முடிவுக்கு வராத பிரச்னைகளில் ஒன்று, பெண்களின் ஆடை மீதான பார்வை. புடவை கட்டினாலும், மாடர்ன் உடைகள் அணிந்தாலும் பெண்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. தனிமனித ஒழுக்கம் அவரவர்களின் பார்வையைப் பொறுத்துதான் உள்ளது என்பதை ஏற்க, இன்னும் நம் தலைமுறையினர் பக்குவப்படவில்லை. அதனால்தான் என்னவோ இந்த ஆடை விஷயத்தில்கூட ஆண்களின் விருப்பத்துக்கு மாறாக பெண்கள் உடைகள் உடுத்தினால், ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதற்கு ஓர் உதாரணமாக இருக்கிறது பிரியாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு எழும் கேள்விகளும் விளக்கங்களும்...

Sponsored


மெல்லிய உடையில் எடுத்த புகைப்படம் ஒன்றை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்திருந்தார் பிரியா. அதில், `சுத்தம். உங்க மேல ரொம்ப நம்பிக்கை வெச்சிருந்தேன். இனி என் கனவுக்கன்னி நீங்க இல்லை. இதைவிட மோசமா போகாதுனு நம்புறேன்' என்று  ஒரு ரசிகர் பதிவிட்டிருந்தார்.

Sponsored


இதற்கு, `ரொம்ப நன்றி. ஆனா, இப்படிக் கீழ்த்தரமா முடிவெடுக்கும் ஆணுக்கு நான் கனவுக்கன்னியா இருக்க விரும்பலை. உங்களுக்கு நம்பிக்கையான கனவுக்கன்னி கிடைக்க வாழ்த்துகள்’ என்று பிரியா பதிலளித்திருந்தார். 

இதற்கு அந்த ரசிகர், `இதில உண்மையான விஷயம் என்னன்னா, இப்படிச் சொல்ற நாங்கதான் விசுவாசமானவங்க. இந்த போட்டோவை ஆதரிக்கிறவங்கதான் கீழ்த்தரமானவங்க. பாரம்பர்யமா இருக்கணும்கிறதுக்காக இதைச் சொல்லலை. உங்கமேல இருக்கிற அக்கறையிலதான் சொல்றோம். ஆனா, நீங்க அதைப் பார்க்கலை. இருந்தாலும், உங்களுக்கான சுதந்திரம் முழுசா இருக்கு' என்று பதிவிட்டார்.

இதற்கிடையே, பிரியாவுக்கு ஆதரவாக ஏராளமானோர் தங்களின் கருத்துகளைப் பதிவுசெய்தார்கள். சிறிது நேர இடைவெளியில் மீண்டும் பிரியா, `இது கண்டிப்பா தலைகனத்தோடு சொல்ற பதில் இல்லை. என் கலாசாரத்தையும் மதிப்பையும் முடிவுபண்ற உங்களைப்போல இருக்கிறவங்களுக்கான எதிர்ப்புதான் இது. என் போட்டோவை zoom செஞ்சு பார்க்கிற நீங்கள்லாம் எப்படி கலாசாரத்தைக் காப்பாத்துவீங்கன்னு ஆச்சர்யமா இருக்கு. இந்த போட்டோவுல பெருசா எந்தவித அலாரமும் எனக்குத் தெரியலை.

உங்களைப்போல zoom செஞ்சு பார்த்து, அபத்தமா பேசிட்டு, அடுத்தவங்களை எடைபோட்டு பார்க்கிற நீங்கதான் கலாசாரத்தை இறுக்கமா பிடிச்சிட்டு இருக்கீங்களா? என்னோட இந்த 1.5 இன்ச் டிரான்ஸ்பிரன்ட் டிரெஸ் பற்றிய கருத்துகளைப் போட்டு கவலைப்படுறவங்களுக்கு நான் சொல்றது, நீங்க கலாசாரம்னு சொல்ற விஷயத்தை எந்த வகையிலும் நான் கெடுக்கலை. என் மதிப்பை நல்லவிதமா கையாள எனக்குத் தெரியும். ரொம்ப நன்றி' என்று பதிலளித்திருந்தார்.

பிரியா பதிவிட்டிருந்ததுபோல் எந்தவிதமான ஆபாசமும் அவர் உடையில் இல்லை. ஆடைகள் அணிவது முற்றிலும் அவரவர் முடிவு. ஆனால், இடத்துக்கு ஏற்றதுபோல் உடைகள் உடுத்துவது மிகவும் முக்கியம். பார்ட்டிகளுக்கு உடுத்தவேண்டிய உடையை கோயில்களுக்கோ, திருமண உடையைப் பயணத்தின்போதோ உடுத்துவது மிகவும் தவறு. இதற்காகத்தான், கேஷுவல், வெட்டிங், பார்ட்டி, டிராவல் என விதவிதமாக பல கேட்டகிரிகளைப் பிரித்து விற்கின்றனர் நம் நாட்டு விற்பனையாளர்கள். அந்த வகையில் பார்த்தால்கூட இது கேஷுவல் உடையணிந்து, கேஷுவலான இடத்தில் எடுத்த புகைப்படம்போலதான் தெரிகிறது. என்றாலும், பலவிதமான கருத்துகள் குவிந்துகொண்டுதான் இருக்கின்றன. உடையை வைத்து பெண்களை மட்டுமல்ல, எந்த மனிதருடைய குணாதிசயங்களையும் எடைபோடுவது தவறு என்பதை எப்போது உணரப்போகிறார்களோ!Trending Articles

Sponsored