நடிகை கல்யாணிக்குப் பெண் குழந்தை பிறந்தது!Sponsoredதன்னுடைய சின்ன வயதிலேயே திரைத் துறைக்குள் நுழைந்து, குட்டிச் சுட்டிப் பெண்ணாக வலம்வந்தவர் நடிகை கல்யாணி. `ஜெயம்' படத்தில் இவருடைய க்யூட் ரியாக்‌ஷன்ஸ் பலரையும் கவர்ந்தது. பிறகு, `பிரிவோம் சந்திப்போம்' சீரியல் மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதன்பின் திருமணத்துக்காக பிரேக் எடுத்தவர், ஆங்கராக ரீ-என்ட்ரி கொடுத்தார். இவருடைய துருதுரு பேச்சுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

குறும்புத்தனம் மிக்க கல்யாணி, ஆகஸ்ட் 20-ம் தேதி அன்று குட்டி இளவரசிக்குத் தாயாகியிருக்கிறார். அந்த இளவரசிக்கு, நவ்யா கல்யாணி ரோகித் எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். நவ்யா என்பதற்கு `புதுவரவு' என்று அர்த்தம் என அழகான தாய்மையில் சிலிர்க்கிறார், கல்யாணி.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored