கட்டலோனியா நாடாளுமன்றம் கலைப்பு: ஸ்பெயின் பிரதமர்Sponsoredகட்டலோனியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் அறிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் வளம் மிகுந்த பகுதியான கட்டலோனியா, தொடர்ந்து தனிநாடு கோரிக்கையை வைத்துவந்தது. ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு, கட்டலோனியா பகுதியிலிருந்து கிடைக்கிறது. ஸ்பெயின் அரசாங்கம், இவர்களது கோரிக்கையை நிராகரித்துவந்தது. இந்நிலையில், கட்டலோனிய மாநில அரசு, தனிநாடுகுறித்து ஸ்பெயினின் தடையையும் மீறி பொது வாக்கெடுப்பு நடத்தியது. ஆனால், இந்த வாக்கெடுப்பில், ஸ்பெயின் அரசு காவல்துறைமூலம் முடக்க, வாக்களிக்க வந்தவர்கள்மீது தாக்குதல் நடத்தியது. வாக்கெடுப்பில், 90 சதவிகித கட்டலோனிய மக்கள், தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்து, தனிநாடு வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளதாகவும் அறிவித்தது.

Sponsored


இந்நிலையில், தனிநாடு கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வந்த கட்டலோனியா அரசைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவது குறித்து ஸ்பெயின் அரசு ஆலோசனை நடத்தியது. ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்குப் பெரும்பான்மை உள்ளதால் கட்டலோனியா நாடாளுமன்றம் கவிழ்க்கப்படும் எனக் கூறப்பட்டது. தற்போது கட்டலோனியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என ஸ்பெயின் பிரதமரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored