’பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும்’: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை'பாகிஸ்தான் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் அமெரிக்கா அதற்கான மாற்று வியூகங்களை வகுத்துக்கொள்ளும்’ என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் அறிவித்துள்ளார்.

Sponsored


அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் நேற்று பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாகிஸ்தான் தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு ஆகும். இதைப் பலமுறை பாகிஸ்தானிடம் கூறிவிட்டோம். பாகிஸ்தான் ஓர் இறையாண்மை நாடு. தீவிரவாதத்துக்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். பாகிஸ்தான் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இல்லையேல் அமெரிக்கா அதன் வியூகங்களை மாற்றிக்கொண்டு வேறு வழியில் செயல்பட வேண்டியது வரும்’ என்றார்.

Sponsored


சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக அறிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் அறிக்கை பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா விரைவில் செயல்படத் தயாராகும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Sponsored
Trending Articles

Sponsored