ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைய இப்படி உதவலாம்! #SupportHarvardTamilChairSponsoredஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை கொண்டுவரத் தமிழக அரசு 10 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. இதன் பின் நடிகர் சங்க தலைவர் விஷால் பத்து லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதன் மூலம் ஹார்வர்டு தமிழ் இருக்கை குறித்த செய்திகள் கவனம் பெற்றுள்ளன. ஏன் ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைய வேண்டும்? அப்படி அமைவதற்கு எப்படி உதவுவது? என்கிற இரண்டு கேள்விகளுக்கான விடைகளைப் பார்ப்போம். 

ஹார்வர்டு பல்கலைக்கழகம் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் உலகின் முக்கியத் தலைவர்கள் படித்துள்ளனர். இதுவரை நோபல் பரிசு பெற்றவர்களில் 47 பேர் இங்கு படித்தவர்கள். 32 பேர் பிரதமர்களாக பிற்காலத்தில் உருவாகியுள்ளனர். புலிட்சர் பரிசு வாங்கிவர்களில் 48 பேர் இங்கு படித்தவர்களே. தன் மாணவர்களுக்காக உலகின் மிகச்சிறந்த நூலகத்தைக் கொண்டுள்ளது இந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம். கிட்டதட்ட 35 லட்சம் புத்தகங்கள் கொண்ட 73 நூலகங்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தற்போது தொடக்க நிலை, நடுநிலை மற்றும் முன்னேறிய நிலை ஆகிய பிரிவுகளின் கீழ் தமிழ் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இருந்தபோதிலும் இங்கு தமிழுக்கு என்று இருக்கை அமையும்பொழுது அதற்கென துறை உருவாகும், துறைத்தலைவர் பேராசிரியர் போன்றவர்களைப் பணியமர்த்துவார்கள். தற்போது தன்னார்வமாக  20 மாணவர்கள் தமிழ்ப் படித்து வருகிறார்கள். அது பலநூறாகப் பெருகும். தமிழ்ப் படித்த சான்றோர்கள் தங்களது ஆய்வறிக்கையை அங்கு தாக்கல் செய்து பட்டம் பெறலாம். இப்படிப் பலபல விஷயங்கள் உள்ளன. உலகில் கிட்டதட்ட 7,000 மொழிகள் உள்ளன. அதில் சீனம், கிரேக்கம், லத்தின், ஹீப்ரு, தமிழ், சமஸ்கிருதம் மற்றும் பெர்சிய மொழி ஆகியவை 'கிளாசிகல்' என்று சொல்லக்கூடிய உயர்தனிச்செம்மொழியாக உள்ளன. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மொழிகளுக்கு தகுதிகள் உண்டு. 

Sponsored


அவை,

Sponsored


பழந்தன்மை, சார்பற்ற தனித்தன்மை, பல்வேறு வழக்குகள் இருந்தாலும் பொதுவான எழுத்துகள், சார்பற்று இருத்தல், பன்மொழிகளைப் பிறப்புவிற்பதற்கான தாய்மைத்துவம், பண்பாட்டு கலைத்தன்மை, விடுதலை, இலக்கிய வளம், மேன்மைமிகு மேற்கோள்களும் சிந்தனை வளம், எனப் பதினொரு வகை தகுதிகளில் அனைத்தையும் கொண்டிருப்பது தமிழ் மட்டுமே ஆகும். ஆனால், மிக அதிக மக்கள் தொகை கொண்ட சீனமும் அங்கு இருக்கை கொண்டுள்ளது. மிகக்குறைவான மக்களால் பேசப்படும் ஹீப்ருவும் தனக்கென தனி இருக்கை கொண்டுள்ளது. இவ்வளவு ஏன் சொற்ப நபர்களே பேசும் சமஸ்க்ருதம் கூட இந்திய அரசின் ஆதரவுடன் தனி இருக்கையினைப் பெற்றுள்ளது. ஆனால், தமிழ் அங்கு வெறும் இருபது பேர் மட்டும் படிக்கும் மொழியாக உள்ளது. உலகின் மூத்த பல்கலைக்கழகத்தில் உலகின் மூத்த மொழியான தமிழ் இடம் பெறாமல் இருப்பது பலருக்கும் ஒரு குறையாக இருந்தது. 

அமெரிக்காவில் வசிக்கும் வைதேகி ஹெர்பர்ட் சங்கத்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவருக்கு நடந்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்டு, அவரைச் சந்தித்தபோது மருத்துவர் விஜய் ஜானகிராமன் அறிமுகமானார். அந்தச் சந்திப்புதான் இன்று ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை உருவாக்க நடக்கும் நிகழ்வின் தொடக்கப்புள்ளி. இதுகுறித்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம் குறிப்பிடுகையில்...

" 'வைதேகி ஹெர்பெர்ட்’ என்ற அமெரிக்கர், தமிழ்ச் சங்க இலக்கிய நூல்கள் பதினெட்டையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். வைதேகியைப் பாராட்டிய ஒரு விழாவில், பென்சில்வேனியாவைச் சேர்ந்த இதய அறுவைசிகிச்சை மருத்துவர் ஜானகிராமன் அவரைச் சந்திக்க நேர்ந்தது.

2,000 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய சங்க இலக்கியத்தின் மேன்மைக்காக, தானும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் அப்போது எழுந்தது. 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம், ஜானகிராமன் தொலைபேசியில் வைதேகியை அழைத்து...

'என் வாழ்நாளில் தமிழுக்கு ஏதாவது பெரிதாகச் செய்யவேண்டும் என நினைக்கிறேன். உங்கள் ஆலோசனை என்ன?’ என்றார். வைதேகிக்கு அந்தக் கணம் மனதில் தோன்றியதைச் சொன்னார்... 'உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடையாது. தொன்மையான தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை அங்கே அமையுமானால், உலகமே பயனுறும். தமிழுக்குப் பெருமை; தமிழர்களுக்கும் பெருமை’ என்றார்.

அதைத் தொடர்ந்து காரியங்கள் அதிவிரைவாக நடந்தன. ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்களோடும் துறைத் தலைவரோடும் மருத்துவர்கள் ஜானகிராமனும், திருஞானசம்பந்தமும் பேசினார்கள்." என்று சொல்லியிருந்தார். 

இன்றைக்குக் கிட்டத்தட்ட 80 சதவிகித பணம் சேர்ந்து விட்டாலும் இன்னும் பணம் தேவையிருக்கிறது. உலகத்தமிழர்கள் தங்கள் பங்களிப்பை தமிழ் மொழிக்குச் செய்ய விரும்பினால் இந்தத் தளத்தின் மூலம் செலுத்தலாம். தனி நபராகவோ கூட்டாகவோ அமைப்புகளின் மூலமாகவோ விரும்பியத் தொகையைச் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Trending Articles

Sponsored