டாக்ஸி ட்ரைவர்... அமைதியான இளைஞன்... அமெரிக்காவில் 8 பேரை கொன்ற சாய்போவ்! #USTerrorAttackSponsoredசினிமா காட்சிகளைப் போல அரங்கேறியுள்ளது அமெரிக்காவில் நேற்று (31.10.2017) நடந்த தாக்குதல் சம்பவம். பெரும்பாலான மக்கள் விதவிதமான உடையணிந்து ஹாலோவீன் கொண்டாடிக் கொண்டிருந்த தருணம் ஒரு ட்ரக்கில் வந்த 29 வயது இளைஞன், உலக வர்த்தக மையத்துக்கு அருகில் உள்ள பைக் செல்லும் பாதையில் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர். போலீஸார் அந்த இளைஞனை வயிற்றில் சுட்டுப் பிடித்தனர். 

அக்டோபர் 2, 2017 லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவமே இன்னும் அமெரிக்கர்களின் மனதிலிருந்து அகலவில்லை. அதற்குள் இன்னொரு துயரச் சம்பவம் நியூயார்க் நகரில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்துக்கு அதிகாரபூர்வமாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்கவில்லை. ஆனால், இது ஐ.எஸ் தாக்குதல்தான் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டில், 'ஐ.எஸ் தீவிரவாதிகளை அமெரிக்காவை விட்டு வெளியேறவும் விடமாட்டோம், உள்ளே நுழையவும் அனுமதிக்க மாட்டோம். மத்திய கிழக்கு மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் அவர்களைத் தோற்கடிப்போம்' என்று சூளுரைத்துள்ளார். 

Sponsored


யார் அந்த மர்ம மனிதன்?

Sponsored


இதனை தீவிரவாதத் தாக்குதலாக அறிவித்துள்ளது அமெரிக்கா. மன்ஹாட்டன் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலை நடத்தியது சாய்போவ் எனும் 29 வயது இளைஞன் என்பதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. அவரது கையில் ஒரு பெல்லட் துப்பாக்கியும், பாயின்ட் பால் துப்பாக்கியும் இருந்துள்ளது. சாய்போவ் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் 2010 ஆம் ஆண்டு ஒஹியோ பகுதியில் குடியேறியுள்ளார். அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர், அவரைப் பற்றிக் கூறும்போது, ''மிகவும் அமைதியான பையன், யாரிடமும் அவ்வளவு அதிகமாகப் பேச மாட்டான். வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்புவான். வேறு ஏதும் பெரிதாக வெளியில் செல்லமாட்டான். சமீபத்தில், அமெரிக்காவில் க்ரீன் கார்டுக்காக விண்ணப்பித்திருந்தான்'' என்று கூறியுள்ளார்.

தாக்குதல் நடத்தும்போது 'அல்லாஹூ அக்பர்' என்ற முழக்கத்துடன் மக்களை நோக்கிச் சுட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இவர் உபேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பதை உபேர் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் சாய்போவை ஓட்டுநர் பட்டியலில் இருந்தும் நீக்கியுள்ளது. 

இந்த சம்பவத்தில் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த 5 பேரும், பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் மற்றும் அடையாளம் காணப்படாத இருவரும் உயிரிழந்துள்ளனர். அர்ஜெண்டினாவைச் சேர்ந்த 5 பேரும் நண்பர்கள்; தங்களது பள்ளி நண்பர்களுடனான 30-வது வருடச் சந்திப்பை நியூயார்க்கில் கொண்டாடுவதற்காக வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2001-ல் உலக வர்த்தக மையத்தின் 'இரட்டைக் கோபுரம்' தாக்குதலுக்குள்ளானது. இந்தக் கட்டடத்துக்கு அருகில்தான் தற்போதைய துப்பாக்கிச் சூடு சம்பவமும் அரங்கேறியுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் சர்வ சாதாரணமாக நடைபெறத் தொடங்கிவிட்டன. 'இஸ்லாமிய நாடுகள் மீதான தடை இதனைத் தடுக்கும்' என ட்ரம்ப் அரசாங்கம் சொல்கிறது. மாறாக, இது தீவிரவாதிகளை இன்னமும் வெறுப்பேற்றும் செயலாகவே உருமாறிவருகிறது.

அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தலைதூக்கி விட்டது. துப்பாக்கிக் குண்டுகளுக்கு இறையாகும் மக்களை அமெரிக்கா எப்படித் தடுக்கப் போகிறது? துப்பாக்கி பெறுவதற்கான எளிய நடைமுறைகளை இனிவரும் நாள்களில், அமெரிக்கா எப்படி நெறிமுறைப்படுத்தப்போகிறது? இதற்கெல்லாம் ட்ரம்ப் விரைவில் பதில் சொல்ல வேண்டும். இல்லையெனில், துப்பாக்கி ஏந்தியிருப்பவர்கள் இன்னும் பல உயிர்களை பலிவாங்கிவிடும் அபாயம் எழுந்துள்ளது. சீக்கிரம் பதில் சொல்லுங்கள் மிஸ்டர் ட்ரம்ப்!Trending Articles

Sponsored