பாரம்பர்யத்துக்கான யுனெஸ்கோ விருதுகள் அறிவிப்பு..! ஶ்ரீரங்கம் கோயிலுக்கு ஆசிய-பசிபிக் மெரிட் விருதுSponsoredதிருச்சி, ஶ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோவின் சார்பில் ஆசிய-பசிபிக் மெரிட் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பழைமை மாறாமல் புதுப்பித்து திருப்பணி செய்ததன் அடிப்படையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கலாசார மரபுகளைப் பாதுகாக்க, பாரம்பர்ய கட்டடங்களை மீட்டெடுக்க, அதைப் பாதுகாத்து பராமரித்து வருபவர்களை ஊக்குவிக்க, ஒவ்வோர் ஆண்டும் பாரம்பர்ய விருதுக்கான போட்டிகளை நடத்தி வருகிறது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ. இந்த ஆண்டுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. 

Sponsored


Sponsored


இந்தப் போட்டி, உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கட்டமாக நடத்தப்படுகிறது. இவ்வாண்டு நடத்தப்பட்ட பாரம்பர்ய விருதுப் போட்டிக்கு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஈரான், நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளிலிருந்து 43 பாரம்பர்ய கட்டடங்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன. இதில் 31 கட்டடங்கள் பழைமை வாய்ந்தது என்ற பிரிவிலும், 12 கட்டடங்கள் புதிய வடிவமைப்புகளைக் கொண்டது என்ற பிரிவிலும் இடம்பெற்றிருந்தது.

இவற்றில் 16 கட்டடங்கள் இந்த ஆண்டுக்கான பாரம்பரிய விருதுகளைப் பெற்றுள்ளன. சீன நாட்டின் ஹாங்காங் நகரில் அமைந்துள்ள ப்ளூ ஹவுஸ் க்ளஸ்டர் கட்டடம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் எக்சலன்ஸ் விருதை வென்றது. அதன்படி யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தாண்டுக்கான விருதுகள் விவரம்:

 ஆசிய-பசிபிக்  தனிச்சிறப்பு விருதுகள் :

புரூக்மேன் மற்றும் மோய்ர் (Brookman and Moir Streets Precinct), பேர்த், ஆஸ்திரேலியா.
ஹோலி டிரினிட்டி சர்ச் (Holy Trinity Cathedral Chruch), ஷாங்காய், சீனா. 

ஆசிய-பசிபிக் மெரிட் விருது :

கிறைஸ்ட் சர்ச் (Christ Church), மும்பை, இந்தியா.
ராயல் பாம்பே ஓபரா ஹவுஸ் (India Royal Bombay Opera House), மும்பை, இந்தியா.
ஸ்ரீ ரங்கம் கோயில் (Sri Ranganathaswamy Temple), ஸ்ரீரங்கம், இந்தியா.
கலை மையம், பெரிய ஹால் மற்றும் கடிகார கோபுரம் கட்டடங்கள் (Great Hall and Clock Tower Buildings) கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து.

ஆசிய-பசிபிக் மதிப்புமிக்க குறிப்புகள் :

பாமோன்ஜி ஹோமார்ஜி வாடியா அமைப்பு கடிகார கோபுரம் (Bomanjee Hormarjee Wadia Fountain and Clock Tower), மும்பை, இந்தியா.
கோஹட் கோட்டையின் நுழைவாயில் (Gateways of Gohad Fort), கோஹட், மத்திய பிரதேசம், இந்தியா.
ஹவேலி தாராம்பூரா (Haveli Dharampura), புதுதில்லி, இந்தியா.
வில்லிங்டன் ஃபவுன்டையின் (Wellington Fountain), மும்பை, இந்தியா.
அஃப்டேப் கலாசார வீடு (Aftab Cultural House), இஸ்ஃபஹான், ஈரான்.
கதீட்ரல் குட் ஷெப்பர்ட்&ரெக்டரி (Cathedral of the Good Shepherd and Rectory Building) கட்டடம், சிங்கப்பூர்.

ஆசிய-பசிபிக் புதிய வடிவமைப்பு :

ஜிங்டெசன் செராமிக் தொழில்துறை அருங்காட்சியகம் (Jingdezhen Ceramic Industry Museum), ஜிங்டெசன், சீனா.
மாசா கிராமம் (Macha Village) கன்சு மாகாணம், சீனா.
பாரசீக வளைகுடா பல்கலைக்கழகம் - கலை மற்றும் கட்டடக்கலைக் கட்டடம் (Persian Gulf University – Faculty of Art & Architecture), ஈரான்.

வரலாற்று பண்புகளை மீட்டெடுப்பதற்கும் பாரம்பர்ய கட்டடங்களைப் பாதுகாப்பதற்கும் பல ஆண்டுகளாக அமைப்பாகவும் தனிப்பட்ட முறையிலும் பாரம்பர்ய கட்டடங்களைப் பாதுகாத்து வருபவர்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்கும் இது போன்ற விருதுகள் நிச்சயம் பலம் சேர்க்கும். Trending Articles

Sponsored