முடங்கிய வாட்ஸ்அப்! ஒரு மணி நேரத்துக்குப் பிறகு செயல்படத் தொடங்கியதுSponsoredகடந்த ஒரு மணி நேரமாக உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயல்பாடு தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.


உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பட்ட மக்களாலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் மற்றும் தகவல் பரிமாற்றும் செயலி வாட்ஸ்அப் ஆகும். தற்போதுள்ள சூழலில் மிக முக்கியத் தகவல் பரிமாற்றும் ஊடகமாக உள்ளது. மதியம் 1.30 மணியிலிருந்து உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயல்பாடு தடைப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியவர்கள், அது சென்றடையாத நிலையில், நண்பர்களின் வாட்ஸ்அப்பை சோதனை செய்துள்ளனர். அதுவும் வேலை செய்யாமல் இருந்துள்ளது.

Sponsored


முதலில், ஐரோப்பாவில் காலை 8 மணியளவில் முதல் பிரச்னை கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற ஆசிய நாடுகளிலும் இப்பிரச்னை குறித்து புகார் வரத்தொடங்கியுள்ளது. உலகம் முழுவதுமுள்ள மக்கள், வாட்ஸ் செயல்பாடு குறித்து ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பியிருந்தனர். தற்போது கடந்த ஒருமணி நேரமாக உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயல்பாடு தடைப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான காரணம் குறித்து இதுவரையில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராமல் இருந்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, வாட்ஸ்அப் மீண்டும் செயல்படத் தொடங்கியது.  
 

Sponsored
Trending Articles

Sponsored