அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு..! - 20-க்கும் மேற்பட்டோர் பலிSponsoredஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள சர்ச்சில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் சதர்லேண்ட் பகுதியில் பாபிஸ்ட் சர்ச்சில் வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் துப்பாக்கியுடன் புகுந்த நபர், திடீரெனச் சுட ஆரம்பித்தார். அதில், வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பலர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை. நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Sponsored


இந்தச் சம்பவம், அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 'பாதிக்கப்பட்ட சதர்லேண்ட் பகுதி மக்களுடன் கடவுள் இருப்பார். இந்த நிகழ்வுகளை எஃப்.பி.ஐ கண்காணிக்கின்றன. ஜப்பானிலிருந்து நான் இதைக் கண்காணிக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில், கடந்த ஒரு மாத காலத்தில் நடத்தப்பட்ட நான்காவது துப்பாக்கிச்சூடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored
Trending Articles

Sponsored