மீன்களுக்கு இரையை மொத்தமாகக் கொட்டிய ட்ரம்ப்!Sponsoredமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜப்பான் பயணம் மேற்கொண்டார். அப்போது, அங்கு கொயிங் என்ற மீன் வகை குளத்துக்கு உணவளித்த ட்ரம்ப், ஒட்டுமொத்த உணவுப் பெட்டியில் இருந்த உணவை ஒரே நேரத்தில் கொட்டிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. ட்ரம்பின் செயல் மீன் பிரியர்களுக்குக் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

ட்ரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இருவரும் மீன் குளத்தில், 'கொயிங்' என்ற மீன் வகைக்கு உணவளித்தனர். மீன்களுக்கு உணவை இரைப்பாகப் போட வேண்டிய இடத்தில், பொறுமையின்றி ட்ரம்ப் கையில் இருந்த மொத்த உணவு வைக்கப்பட்டிருந்த உணவு டப்பாவையும் குளத்தில் போட்டுவிட்டார். அருகில் இருந்த அமெரிக்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன், ட்ரம்பின் செயலைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் நின்றிருக்கிறார். இருந்தாலும், ட்ரம்பின் இந்தச் செயலுக்கு ட்விட்டரில் பல கோப ட்வீட்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored