தியோடிஹூகான்... நன் மாடல்... மர்மங்கள் நீங்காத பழைமையான இடங்கள்!Sponsoredசில கோயில்களின் கட்டமைப்புகளைப் பார்க்கும்போது பிரமிப்பாய் இருக்கும். அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் எப்படி அந்தக் கற்களை சுமந்திருப்பார்கள்? அப்படியொரு பிரம்மாண்டத்தைப் படைக்க அவர்களால் எப்படி முடிந்தது எனப் பல கேள்விகள் எழும். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலும் ஆய்வுகளை மேற்கொண்டு, அங்கு வாழ்ந்தவர்கள் யார், எந்தவிதமான கலாசாரத்தைப் பின்பற்றினார்கள் என்பதைக் கண்டுபிடித்துவிடுவர். ஆனால், ஆராய்ச்சியாளர்களால் இன்னமும் தெளிவாக விவரிக்க முடியாத மர்மமான, பழைமை வாய்ந்த இடங்களும் இந்தப் பூமியில் உண்டு. அவற்றைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம் .

தியோடிஹூயகான் (Teotihuacan, the real temple of doom):

Sponsored


By eu (tirada por mim) [Public domain], via Wikimedia Commons

Sponsored


மெக்ஸிகோ நகரத்திற்கு வெளியே, தொலைதூரத்தில் உள்ள பிரமிடுகள் மற்றும் அரண்மனைகளின் நகரமே தியோடிஹூகான். நாகரிக உலகத்திலிருந்து மறைக்கப்படுவதற்காக அஸ்டெக்ஸ்கள் (Aztecs) கண்டுபிடித்த பெயர்தான் தியோடிஹூயகான். ஆனால் தியோடிஹூயகான் இதன் அசல் பெயர் இல்லை. இந்த இடத்தை அஸ்டெக்ஸ் கட்டவுமில்லை.

அப்படி என்றால் அங்கே யார் வாழ்ந்திருப்பார்கள்? அவர்களால் இப்படிப்பட்ட மேம்பட்ட பெரிய படைப்பை எவ்வாறு கட்ட முடிந்தது? ஏன் அவர்கள் இந்த தேசத்தை விட்டு வெளியேறினார்கள் எனப் பல கேள்விகள் விடையின்றி அலைகின்றன. அஸ்டெக்ஸ்குகளால் கூட இந்தப் பரந்த நகரம் எப்படித் தோன்றியிருக்கும் எனப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, இவர்கள் இந்த இடம் கடவுளால் கட்டப்பட்டது எனக் கருதினர்.( தியோடிஹூயகான் என்பதன் பொருள் "கடவுள்களின் இடம்"). ஏனென்றால் இதைப் பற்றி விவரிக்க எந்தக் கோட்பாடும் இல்லை.

 தியோடிஹூயகான் மிகப்பெரிய மாநகரமாக இருந்திருக்கலாம். (அங்கு 2,50,000 மக்கள் இருந்திருக்கலாம் ). அங்கிருந்த குடிமக்கள் மற்றும் கலைகள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், பிரமிடுகள் ஒன்றில் தியாகத்தின் அறிகுறியாக எலும்புக்கூடுகள் மட்டுமே உள்ளன. 

Goseck circle.

1999 ஆம் ஆண்டு உள்ளூர் சர்வேயர்கள் வான்வழி புகைப்படங்களின் மூலம் தூங்கும் ஜெர்மன் என அழைக்கப்படும் கோசெக்- ஐ  கண்டுபிடித்தனர். கூடுதலான ஆய்வுகளில் அவர்களால் சரியாக எதுவும் கூற இயலவில்லை. 11 ஆண்டுகளுக்குப் பின்னர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த வட்டம் என்ன என்பதை குறித்து ஒரு முடிவிற்கு வந்தனர். இந்த வட்டம் பண்டைய ஆய்வு மையத்தின் எஞ்சிய பகுதி; சுமார் 250 அடி விட்டம். இதன் நுழைவாயில்கள் சூரியஅஸ்தமனம், உதயம் மற்றும் வடக்கு திசையை நோக்கியுள்ளது. இதை யார் கட்டியிருப்பார்கள் எனத் தெரியவில்லை. இந்த அமைப்பு 7,000 ஆண்டுகள் பழைமையானது, அழகானது. உண்மையில் மூதாதையர்கள் இந்தச் சக்கரங்களைக் கொண்டு எப்படி வேலை பார்த்திருப்பார்கள் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இது ஒரு விரிவான கடிகாரமும் அல்ல. தொல்பொருள் ஆராய்ச்சியார்கள் இங்கே சடங்குகள் மற்றும் மனித எலும்புகள் ஆகியவற்றில் எஞ்சியவைகளை வெட்டுக் குறிப்புகள் மூலம் கண்டுபிடித்தனர். ஆனால், வட்டத்தை கட்டியமைத்த கலாசாரம் பற்றி தெரியவில்லை. 2005-ஆம் ஆண்டில் கோசெக் மக்கள் வட்டத்தை மறுகட்டமைப்பு செய்தனர்.

Nan model (நன் மாடல்) :

By NOAA (http://www.photolib.noaa.gov/htmls/mvey0173.htm) [Public domain], via Wikimedia Commons

ஆயிரம் வருடங்கள் பழைமையான பாழடைந்த டெம்வென் (Temwen) அருகே உள்ள சிறிய தீவு. இந்தத் தீவில் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். மேலும், மக்கள் இந்த இடத்தைச் சுற்றிப் பார்க்க மறுக்கின்றனர். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை இந்த நகரம் தீயது, சபிக்கப்பட்டது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இவற்றின் பெரும் இடிபாடுகளைக் தேடித் தோற்றங்களைக் கண்டறிய முயல்கின்றனர். ஆனால், அங்கே எந்தக் குறிப்பும் இல்லை. இது சவுதிலூரின் ராஜவம்சத்தின் இடமாக இருக்கலாம். ஆனால், இந்த இடத்தை கட்ட அவர்களை எது தூண்டியது என்பது மர்மமாகவே உள்ளது. நூறு சிறிய மனிதர்களால் உருவாக்கப்பட்ட 200க்கும் அதிகமான ஏக்கர் நிலம் கொண்ட தீவு. இதில் சுமார் 8,00,000 டன் கட்டடப் பொருள்கள் உள்ளன. தனிப்பட்ட பாறைகள் சில 50 டன் எடையுள்ளவை.

நன் மாடல் சுற்றிலும் தண்ணீரால் சூழப்பட்ட சிறிய தீவுகளின் ஒரு கொத்துதான். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த மக்கள் அருகில் உள்ள தீவுகளிலிருந்து வந்திருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால் அவற்றை விளக்க முடியவில்லை. அவர்கள் மரத்தாலான தெப்பங்களைக் கொண்டு போக்குவரத்தைப் பெருக்க முயன்றுள்ளனர்.

கலிலேயாக் கடலின் கீழ் இராட்சத பாறை நினைவுச் சின்னம்

                                                             Sci-news.com

2003 -ஆம் ஆண்டில் இஸ்ரேலியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் குழுவானது கலீலி கடலில் ஒரு கடற்படுக்கையைப் பகுப்பாய்வு செய்தனர். கவனமாக ஒழுங்கமைக்கப்பட்ட, தீங்கு விளைவிக்காத ஆயிரக்கணக்கான கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூம்பு வடிவ சேகரிப்பின் விட்டம் 230 அடி, 39 அடி உயரம், 60,000 டன்  எடை . இது ஸ்டோன்ஹென்ஜை (Stonehenge) விட இரண்டு மடங்கு பெரிதாகும். ஈபிள் கோபுரத்தைவிட ஆறுமடங்கு வலுவானதாக உள்ளது. பெரியது, பழைமையானது, ஆனால் கடலின் அடியில் இயற்கையாக உருவானது அல்ல. இது பற்றி விஞ்ஞானிகள் இப்படிச் சொல்கிறார்கள். “ இது 2000 முதல் 12,000 ஆண்டுகள் பழைமையானது; நிலத்தில் கட்டப்பட்ட இது வெள்ளத்தினால் இங்கு வந்திருக்கலாம். இது செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்தாலும் இது என்ன என்பது தெரியவில்லை”Trending Articles

Sponsored