பாரிஸ் ஒப்பந்தம்: இணைந்த சிரியா, தனிமையில் அமெரிக்கா!பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் சிரியா இணைய முடிவு செய்திருப்பதை அடுத்து தற்போது சர்வதேச அளவில் அமெரிக்கா மட்டும் தனித்து விடப்பட்டுள்ளது.

Sponsored


2015-ம் ஆண்டு, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பாரிஸில் சந்தித்து, இரவுப் பகலாக பருவநிலை மாற்றம்குறித்து விவாதித்து, ஓர் ஒப்பந்தத்தை வடிவமைத்தார்கள். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம், ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை (Carbon Emmission) இயன்ற அளவு குறைப்பது. அதாவது, வளர்ச்சியின் பெயரால், பொருளாதார முன்னேற்றத்தின் பெயரால், சூழலியலைக் கெடுக்கும் தொழிற்சாலைகளை நெறிமுறைப்படுத்த வேண்டும். அதற்கு ஏற்றார்ப்போல தேசங்கள் தங்கள் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்பதுதான் திட்டம். சீனாவும் அமெரிக்காவும்தான் உலகத்திலேயே அதிக அளவு கரியமில வாயுவை உமிழும் தேசங்கள். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், அமெரிக்கா இதற்கு ஒப்புக்கொண்டது.  

Sponsored


ஆனால், ஒரே ஆண்டில் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால், தொடக்கம் முதல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்து வந்த சிரியா தற்போது பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்தது. இதனால் சர்வதேச அளவில் இந்த ஒப்பந்தத்திலிருந்து பிரிந்து அமெரிக்கா மட்டும் எதிர்ப்புத் தெரிவித்து தனித்து விலகியுள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored