'இறையாண்மை ஜனநாயக நாடாகத் திகழும் இந்தியா!': ட்ரம்ப் பாராட்டுSponsored”இந்தியா, மிகச்சிறந்த இறையாண்மை மிக்க ஜனநாயக நாடாகத் திகழ்கிறது” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு, வியட்நாமில் நடைபெற்றுவருகிறது. அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வியட்நாம் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகள் மத்தியில் பேசினார். அப்போது, ‘சமீபத்தில், இந்தியா தனது 70-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடியது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியா, உலகின் மிகப்பெரிய குடியரசு நாடு. பொருளாதாரரீதியில் இந்தியா சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளதுடன், அதிகரித்துவரும் நடுத்தர மக்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது" என்று பாராட்டிப் பேசியுள்ளார்.

Sponsored


இந்தோ- ஆசியா கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக, மோடி பிலிப்பைன்ஸ் செல்ல உள்ளார். இந்த மாநாட்டில், அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட சர்வதேசத் தலைவர்கள் பங்கேற்க உள்ள நிலையில், மோடியையும் இந்தியாவையும் புகழ்ந்து பாராட்டிப் பேசிவருகிறார் ட்ரம்ப். மேலும், ஆசியப் பிராந்தியங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ட்ரம்ப், வடகொரியாவுக்கு எதிராக நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

Sponsored
Trending Articles

Sponsored