பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் அதிபர் ட்ரம்ப்!Sponsoredபிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற உள்ள ஏசியான் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திக்க உள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வருகிற 14-ம் தேதி 25-வது இந்தியா - ஏசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை பிலிப்பைன்ஸ் புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிலிப்பைன்ஸ் செல்லும் மோடி அங்கு நடைபெற உள்ள ஏசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் உரை நிகழ்த்த உள்ளார். மேலும் பல நாட்டு முக்கியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Sponsored


தற்போது அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது சர்வதேச நிலவரம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமருடன் அதிபர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிரது. மேலும் சீனப் பிரதமரையும் மோடி சந்திக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored