'கிழவர்' என்று விமர்சித்த கிம்! ட்ரம்ப் வருத்தம்Sponsoredவடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தன்னை 'கிழவர்' என்று அழைத்து விமர்சித்தது வருத்தமடையச் செய்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


ஐ.நா.வின் தடைகளையும், உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை, அணு ஆயுதச்சோதனையில் ஈடுபட்டுவருகிறது. இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்துவருகிறது. இதே நிலை தொடர்ந்தால் வடகொரியா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். பதிலுக்கு வடகொரிய அதிபர் கிம், 'அறிவற்ற கிழவர் ட்ரம்பின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் கற்பனை செய்தே பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும்' என்று விமர்சித்தார்.

Sponsored


இது தனக்கு வருத்தம் அளித்ததாக ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 'கிம் ஜோங், உன்னை நான் குள்ளமான, குண்டான நபர் என்று விமர்சிக்கவில்லை. ஆனால், என்னை ஏன் கிழவர் என்று சொல்லி அவர் அவமதித்தார் என்று தெரியவில்லை. சரி பரவாயில்லை. அவருடன் நண்பர் ஆவதற்கு நான் முயன்று கொண்டிருக்கிறேன். ஒரு வேளை அது நிறைவேறக்கூடும்' என்று ட்ரம்ப் ட்வீட்டியுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored