வியட்நாம் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு!Sponsoredபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏசியான் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி, வியட்நாம் பிரதமர் நியான் ஸூவானைச் சந்தித்தார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், 31-வது ஆசிய உச்சி மாநாடு, மிகப் பிரமாண்டமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கைகோத்து, தங்களின் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். ஆசிய மாநாட்டில் கலந்துகொள்ள வருகைதந்த பிரதமர் மோடியை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ ட்யூட்டர்டே வரவேற்றார். முன்னதாக, மணிலா விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். 

Sponsored


31-வது ஆசிய உச்சி மாநாடு மற்றும் 12-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றிருப்பதன் மூலம், இந்தியா - ஆசிய நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேலும் வலுப்படும் என்பதோடு, மணிலாவுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில், வியட்நாம் பிரதமர் நியான் ஸூவான் ஃபுக்கை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். மேலும், ஆஸ்திரேலியப் பிரதமர் மேல்கோம் டர்ன்புல்லையும் சந்தித்துப் பேசினார் மோடி.

Sponsored
Trending Articles

Sponsored