உலகக் கோப்பையில் இருந்து இத்தாலி 'அவுட்' - பஃபான் கனவு தகர்ந்தது!Sponsoredலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இத்தாலி அணி தகுதி பெறவில்லை. ஸ்வீடன் அணியிடம் தோல்வி கண்டதையடுத்து, உலகச் சாம்பியன் அணி ரஷ்யாவுக்குப் பயணிக்கவில்லை.

ஐரோப்பிய ப்ளே- ஆஃப் சுற்று 2-வது லெக் ஆட்டம், மிலனில் உள்ள சான்சிரோ மைதானத்தில் 74 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது. பந்தை தக்கவைத்து ஆடினாலும், இத்தாலி வீரர்களால் கோல் அடிக்க இயலவில்லை. ஏராளமான வாய்ப்புகளை வீணடித்தனர். ஸ்வீடன் அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் கோல் விழாமல் சமனில் முடிந்ததையடுத்து, ஸ்டாக்ஹோமில் நடந்த முதல் லெக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஸ்வீடன் அணி, உலகக் கோப்பைக்கு முன்னேறியது.

Sponsored


உலகக் கோப்பைத் தொடருக்கு, 1958-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் இத்தாலி அணி தகுதிபெறவில்லை. முன்னதாக, 1930,1958-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியிலும் இத்தாலி அணி விளையாடியதில்லை. தோல்வி அதிர்ச்சியால், அந்த நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Sponsored


இத்தாலி அணியின் கேப்டன் ஜியான்லுகி பஃபான் கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களைக் கரையச்செய்தது. தற்போது, 39 வயதான பஃபான் ரஷ்யா உலகக் கோப்பைத் தொடருடன் இத்தாலி அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். துரதிருஷ்டவசமாக அவரின் ஆசை தகர்ந்ததையடுத்து, நேற்றுடன் சர்வதேசப் போட்டியிலிருந்து விடைபெற்றார். இத்தாலி அணிக்காக 175 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். இதுவரை 5 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடியுள்ள பஃபான், ரஷ்ய உலகக் கோப்பையில் பங்கேற்றால், 6 உலகக் கோப்பையில்  விளையாடிய ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருப்பார். இத்தாலி அணி 4 முறை உலகக் கோப்பையை வென்ற அணி. கடைசியாக, 2006-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றிருந்தது... 

ஸ்வீடன் அணியின் கேப்டன் ஸ்லாட்டன் இப்ரோஹிம்விச், கடந்த ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து விடைபெற்றார். அதனால், அந்த அணியும் தடுமாற்றத்துடன்தான் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னேறியுள்ளது. கடைசியாக 2006-ம் ஆண்டு, ஸ்வீடன் அணி உலகக் கோப்பையில் விளையாடியது. கடந்த இரு தொடர்களுக்குத் தகுதி பெறவில்லை. Trending Articles

Sponsored