தமிழ் இருக்கைக்காக அமெரிக்காவின் மிஸ்ஸோரி தமிழ் சங்கம் உதவி!Sponsoredஅமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்புக்காக, அமெரிக்காவின் மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம் நன்கொடை வழங்கியுள்ளது.

அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில், உலகத் தமிழர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்கா வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சியில் இறங்கி, நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கையை அமைக்க பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், நிதிப் பற்றாக்குறை நிலவிவந்தது. இந்நிலையில் தமிழக அரசு, 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க நிதியாகத் தர ஒப்புக்கொண்டது. இதனால், விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Sponsored


ஆனால், இன்னும் நிதிப் பற்றாகுறை நிலவுவதாகக் கூறப்பட்டதால், அமெரிக்காவின் மிஸ்ஸோரி மாகாண தமிழ்ச்சங்கம், 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நிதி உதவியாக வழங்கியுள்ளது. இதற்காக, மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் மற்றும் இசைக்கச்சேரி விழா நடத்தப்பட்டு, நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored