அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை!Sponsoredஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இந்திய மாணவர் ஒருவர் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தரம்பிரீத் சிங் ஜாஸர் (வயது 21). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் பட்டப் படிப்புக்காகச் சென்றார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு கலிஃபோர்னியா மாகாணம் ஃபிரஸ்னோ நகரில் உள்ள ஒரு கடையில் வைத்து கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 
ஃபிரஸ்னோ நகர போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அத்வால் என்ன 22 வயது இளைஞர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored


அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியர்கள் மீதான தாக்குதலும் கூடி வருவது கவலையளிக்கும் விஷயமாகும்.

Sponsored
Trending Articles

Sponsored