டிசம்பரில் ஒபாமா இந்தியா வருகை..! இளம் தலைவர்களுக்கு அழைப்புஅமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். 

Sponsored


அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு சொந்தமான அறக்கட்டளைக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒபாமா பேசும் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் அவர், 'இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் இளம் தலைவர்கள் அனைவரையும் நாங்கள் ஒன்றிணைக்கவுள்ளோம். இந்தியா முழுவதும் பல்வேறு ஆக்கபூர்வமான பணியில் ஈடுபட்டுவரும் இளம் தலைவர்களுடன் நான் உரையாற்ற விரும்புகிறேன். யார் யாரெல்லாம் தங்களது சமூகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல எடுத்துவரும் முயற்சிகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறீர்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் Obama.org என்ற இணையத்தில் பதிவு செய்யலாம்' என்று தெரிவித்துள்ளார். 
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored