உலக அழகி ஆனார் இந்திய அழகி...வாழ்த்து மழை குவிகிறது!Sponsoredஇந்த ஆண்டுக்கான உலக அழகிப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றுள்ளார்.


2017-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி இன்று இரவு சீனாவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 108 அழகிகள் இதில் கலந்துகொண்டனர்.  இந்தப் பிரமாண்ட அழகிப் போட்டியில், இந்தியா சார்பாக ஹரியானாவைச் சேர்ந்த 21 வயது மருத்துவ மாணவி மனுஷி சில்லர் (Manushi Chillar) கலந்துகொண்டார். இறுதிச்சுற்றில் அவர் வெற்றிபெற்று உலக அழகியாக கிரீடம் சூட்டப்பட்டார். இவர் ஏற்கெனவே இந்திய அழகியாக தேர்வானவர் ஆவார்.

Sponsored


இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த “மிஸ் இந்தியா 2017” போட்டியில், 29 மாநிலங்களைச் சேர்ந்த அழகிகளை வென்று, பட்டத்தைத் தட்டிச் சென்றார். இதையடுத்து, உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ளவிருக்கும் அழகியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் வெற்றி சூடியிருக்கிறார். பிரியங்கா சோப்ராவுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் உலக அழகிப் போட்டியில் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மனுஷி சில்லருக்கு வாழ்த்து மழை குவிந்துவருகிறது.

Sponsored
Trending Articles

Sponsored