தொடர் ஊழல் வழக்குகள்: பாகிஸ்தானிலிருந்து வெளியேற நவாஸுக்கு தடை?



தொடர் ஊழல் குற்ற வழக்குகளைச் சந்தித்துவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்-க்கு பாகிஸ்தானிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Sponsored


பனாமா கேட் ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு விசாரணை தீவிரமடைந்துவருகிறது. உலகிலுள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்துவருவதாக, பனாமா லீக்ஸ் ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச் செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் பெயரும் சிக்கியிருந்தது பரபரப்பை அதிகப்படுத்தியது. நவாஸ் ஷெரிஃப் மட்டுமல்லாமல், அவரின் மகள் மற்றும் மகன்களும் இந்த ஊழல் வழக்கில் உள்ளதால், அவர்கள்மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து,  நவாஸ் பிரதமர் பதவியை இழக்கும் அளவுக்கு விவகாரம் தீவிரமடைந்தது.

Sponsored


இதற்கு முன்னர், சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்ததால் நவாஸின் மகன்கள் மற்றும் மகள்மீது பிடிவாரன்ட் பிறப்பித்து கடந்த மாதம் உத்தரவிட்டார் நீதிபதி. இந்நிலையில், தற்போது நவாஸ் ஹெரிஃப் பாகிஸ்தானிலிருந்து வெளியேறத் தடை விதிப்பதற்கான நடைமுறைகளை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sponsored




Trending Articles

Sponsored