`தொடர்ந்து பதவியில் இருப்பேன்..!' - ராணுவப் புரட்சியை மறுதலிக்கும் ஜிம்பாப்வே அதிபர்



Sponsored



ஜிம்பாப்வேயில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு, அதன் விளைவாக அந்நாட்டின் அதிபர் ராபர்ட் முகபே ,வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று தொலைக்காட்சி  வழி உரையாற்றிய முகபே, `நான் தொடர்ந்து பதவியில் நீடிப்பேன்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த ஜிம்பாப்வேயின் விடுதலைக்காகப் பாடுபட்டவர், ராபர்ட் முகபே (Robert Mugabe). ஜிம்பாப்வேயின் முந்தைய பெயர், ரெகோத்சியா. வடக்கு ரெகோத்சியா, தெற்கு ரெகோத்சியா என இரண்டு பிரிவாக இருந்தது. தெற்கு ரெகோத்சியாவை பிரிட்டிஷ் ஆண்டது. சிறுபான்மையினராக இருந்த ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்தனர். பெரும்பான்மைக் கறுப்பர்கள் இருக்கும் தேசத்திலி  ருந்து ஆங்கிலேயர்களை அகற்றும் போராட்டங்கள், 1960-களில் தீவிரம் அடைந்தன. ஆங்கிலேய அரசுக்கு எதிராக குரல் எழுப்பியதால், தேசத்துரோக வழக்கில் முகபே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை ஆனதும், வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த முகபே, `ஜிம்பாப்பே ஆப்பிரிக்க தேசிய யூனியன்' என்ற கட்சியைத் தொடங்கி, அதன் தலைவரானார். அதைத் தொடர்ந்து 1987-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில், முகபே ஜிம்பாப்வேயின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றுவரை அவரே அதிபராக நீடித்து வருகிறார். ஜிம்பாப்வே இப்போது, பெரும் பொருளாதார சிக்கலில் தவிக்கிறது. இந்தச் சூழலில், அந்நாட்டின் ராணுவம் முகபே-வுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டு, அவரை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

Sponsored


இதுகுறித்து முகபே, `கட்சி நடைமுறைகள் சில உள்ளன. அது முடிந்த பிறகு மீண்டும் அதிபராகத் தொடர்வேன். ராணுவம், மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் சாதக பாதகங்கள் இருந்தாலும், அவர்களின் எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன். நாம் இப்போதிருக்கும் பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும்' என்று கூறி, ஜிம்பாப்வே மக்களிடம் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அதிபர் பதவி விலகிவிடுவார் என்று பெரும்பான்மை ஜிம்பாப்வே குடிமக்கள் நினைத்திருந்த நிலையில், இப்படியொரு கருத்தை முகபே கூறியுள்ளார். 

Sponsored


கடந்த 15-ம் தேதி, ஜிம்பாப்பே தலைநகர் HARARE-வில் உள்ள அதிபரின் வீட்டுக்குள் நுழைந்த ராணுவம், முகபேவை வீட்டுச் சிறையில் வைப்பதாக அறிவித்தது. எனினும், ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், 'அதிபர் முகபே எங்களது இலக்கு அல்ல. அவரைச் சுற்றி இருக்கும் குற்றவாளிகளைக் களையெடுக்கவே இந்தப் புரட்சியில் ஈடுபட்டோம்' என்று சொல்லியிருந்தது. இதனால், ஜிம்பாப்வேயின் நிலைமை இன்னும் சிக்கலாக மாறியுள்ளது. 
 



Trending Articles

Sponsored