சீன இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்த மனுஷி சில்லர்! Sponsoredசமீபத்தில் உலக அழகிப் பட்டம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர், சீன இளைஞர்களின் இதயங்களையும் கொள்ளையடித்துள்ளார். அவருக்குப் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.


சீனாவின் சான்யா சிட்டியில் நவம்பர் 18-ம் தேதி உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் (20) உலக அழகியாகப் பட்டம் சூட்டப்பட்டார். மருத்துவக் கல்லூரி மாணவியான இவர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்ஸிகோ நாடுகளின் அழகிகளைத் தோற்கடித்து பட்டம் வென்றார். இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

மனுஷி சில்லர் இந்தியர்களின் இதயங்களைக் கவர்ந்தது மட்டுமல்லாமல், சீன இளைஞர்களின் மனங்களைக் கொள்ளையடித்துள்ளார். சீனாவில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை. அதற்குப் பதிலாக வெய்போ என்னும் சமூக வலைதளம் அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த சமூக வலைதளத்தில் உறுப்பினர்களாக இருக்கும் சீன இளைஞர்கள் மனுஷி சில்லரின் படத்தை வெளியிட்டு அவரைக் கொண்டாடி வருகின்றனர். 

“கங்கை நதிக்கரையில் பிறப்பவர்களுக்கு இயற்கையிலேயே அழகும் ஆரோக்கியமும் கைகூடி வருகிறது. அதுபோல மனுஷி சில்லரும் அழகாக இருக்கிறார்” என்று ஒருவர் புகழ்ந்து எழுதியுள்ளார்.

2000-ம் ஆண்டில் இந்தியாவுக்குப் பிரபஞ்ச அழகி (லாரா தத்தா), உலக அழகி (பிரியங்கா சோப்ரா), ஆசிய பசிபிக் அழகி (டையா மிர்ஸா) ஆகிய பட்டங்கள் கிடைத்தன. இதைக் குறிப்பிட்டு, “இந்தியப் பெண்கள் இயல்பிலேயே அழகானவர்கள். இந்தியா முழுக்கவே அழகிகள் தான்” என்று உச்சி நுகர்ந்து வருகிறார்கள் சீன நெட்டிசன்ஸ்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored