”பிரதமர் மோடியைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்”: இவான்கா ட்ரம்ப் விருப்பம்Sponsored”பிரதமர் மோடியைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மகள் இவான்கா ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடக்கவுள்ள சர்வதேசத் தொழில்முனைவோர் மாநாட்டில், இவன்கா ட்ரம்ப் கலந்துகொள்ளவிருக்கிறார். வருகிற 28-ம் தேதி தொடங்கவிருக்கும் இந்தத் தொழில் முனைவோர் மாநாட்டுக்காக அமெரிக்க தொழில்முனைவோர் குழுவைத் தலைமையேற்று இந்தியா அழைத்துவருகிறார் இவான்கா ட்ரம்ப். இதற்காக ஹைதராபாத் நகரம் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு எனப் பல வகையிலும் தயாராகி வருகிறது.

Sponsored


இந்நிலையில், நேற்று வாஷிங்டனில் நடந்த இந்தியப் பயணம்குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவான்கா ட்ரம்ப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “விரைவில் தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்குப் பயணம் செய்ய உள்ளேன். உள்ளடக்கிய வளர்ச்சிக்காக இந்தியா- அமெரிக்கா இணைந்து பணியாற்றும். இந்தத் தொழில்முனைவோர் மாநாட்டில் முதன்முறையாக அதிகளவில் பெண் தொழில்முனைவோர் கலந்துகொள்ள உள்ளனர் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். இந்தியப் பயணத்தின்போது பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரைச் சந்திக்க மிகுந்த ஆவலுடன் உள்ளேன்” எனக் கூறினார்.

Sponsored
Trending Articles

Sponsored