சுற்றுலாவாசிகளுக்கு மிக அருகில் வந்த திமிங்கிலம்..! ஃபேஸ்புக்கில் வைரலாகும் வீடியோSponsoredஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா பகுதியிலுள்ள கிங்ஸ்டன் கடற்கரைப் பகுதியில் மக்கள் குளிக்கும் இடத்துக்குத் திமிங்கிலம் வந்துள்ளது. அந்த வீடியோ தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகிவருகிறது. 


ஆஸ்திரேலியாவின் கிங்ஸ்டன் கடற்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட நபர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அவர்கள், கரையிலிருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் குளித்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு மிக அருகில் திமிங்கிலம் வந்துச் சென்றது. அந்த திமிங்கிலம் அவர்களை எந்தத் தொந்தரவும் செய்யாமல் அருகில் வந்து வந்து சென்றுள்ளது. இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அவர், அதை அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Sponsored


அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. வீடியோவுக்கு கீழே வந்துள்ள ஒரு கமென்டில், '7 மணியளவில் சிறு படகில் சென்ற ஒரு குழு திமிங்கிலத்தை விரட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் ஒருவராக நீங்கள் இருந்தால் வெக்கப்பட வேண்டும்' என்று பதிவிடப்பட்டிருந்தது. இருப்பினும், பொதுமக்கள் அந்தத் திமிங்கிலத்தை விரட்டினார்களா அல்லது அது தானாகவே வந்ததா என்று தெரியவில்லை. இதுகுறித்து தெரிவித்த விலங்கு ஆர்வலர்கள், `அந்தத் திமிங்கிலம் துன்பத்தில் இல்லை. அது நல்ல மனநிலையில்தான் இருந்தது. அது ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது' என்று தெரிவித்துள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored