`நான்தாங்க பெஸ்ட்...!' - தனக்குத்தானே புகழாரம் சூட்டிக்கொண்ட ட்ரம்ப்Sponsoredடொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் 45 வது அதிபராகப் பதவியேற்றார். அப்போது முதல் இப்போது வரை கருத்துகள் மூலமும் செயலின் மூலமும் பல சர்ச்சைகளைக் கிளப்பி உலகப் புகழ் பெற்றார் ட்ரம்ப். குறிப்பாக, உலகத் தலைவர்களில் ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருப்பவர்களில் ட்ரம்ப் முன்னிலை விகிக்கிறார். தற்போது ட்ரம்ப், அமெரிக்க அதிபராகப் பதவியேற்று 10 மாதங்கள் முடிந்துவிட்டன. இந்நிலையில், இது குறித்து அவரே தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டிக்கொண்டுள்ளார். 

இது குறித்து ட்ரம்ப், `நான் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற முதல் நாளிலிருந்து, தேர்தலில் தோற்றதுக்காக ஜனநாயகக் கட்சியினரின் வெற்றுக் காரணங்களும் ரஷ்யா, ரஷ்யா, ரஷ்யா என்ற கூக்குரலும் கேட்டது. இதை அனைத்தையும் தாண்டி, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றியுள்ளேன். இதுவரை பதவியிலிருந்த அமெரிக்க அதிபர்கள் 10 மாதங்களில் செய்ததைவிட நான் அதிகமாகவே செய்துள்ளேன். அமெரிக்காவை மீண்டும் க்ரேட் ஆக்குங்கள்!' என்று ட்வீட் பதிவிட்டுள்ளார். 
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored