நவாஸ் மீதான தொடர் வழக்குகள்: ஆறு மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவுSponsoredஊழல் வழக்குகளில் சிக்கித்தவித்துவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீதான அத்தனை விசாரணை வழக்குகளையும் ஆறு மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பனாமா கேட் ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு விசாரணை தீவிரமடைந்துவருகிறது. உலகிலுள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்துவருவதாக, 'பனாமா லீக்ஸ்' ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச் செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பெயரும் சிக்கியிருந்தது பரபரப்பை அதிகப்படுத்தியது. நவாஸ் ஷெரீஃப் மட்டுமல்லாமல், அவரின் மகள் மற்றும் மகன்களும் இந்த ஊழல் வழக்கில் உள்ளதால், அவர்கள்மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து,  நவாஸ் பிரதமர் பதவியை இழக்கும் அளவுக்கு விவகாரம் தீவிரமடைந்தது.

Sponsored


இதையடுத்து, நவாஸ் மற்றும் அவரது மகள், மகன்களுக்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டு, பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேலும் இரண்டு ஊழல் வழக்குகள் நவாஸ் குடும்பத்தின்மீது தொடரப்பட்டன. வழக்குகள் குவிந்திருப்பதால், விசாரணையை ஆறு மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored