`போர்கள் எந்தப் பிரச்னையையும் தீர்த்ததில்லை!' - முஷாரப்பைக் கண்டித்த பரூக் அப்துல்லாSponsored`லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜமாத்-உத்-தவா போன்ற அமைப்புகளுக்கு நான் மிகப் பெரிய ஆதரவாளன்' என்று கூறி, பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

முன்னர் பர்வேஸ் முஷாரப், `லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜமாத்-உத்-தவா போன்ற அமைப்புகளுக்கு நான் மிகப் பெரிய ஆதரவாளன். அவர்களுக்கும் என்னைப் பிடிக்கும். என்னை ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அவர்கள், காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக அரங்கேற்றும் செயல்களுக்கு நான் எப்போதும் இசைவு கொடுத்தே வந்துள்ளேன். அவர்கள்தான் காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிரான வலிமை வாய்ந்தவர்கள். இந்த அமைப்புகளைத் தீவிரவாத அமைப்புகளாக இந்தியா, அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து அறிவிக்கச் செய்துள்ளது' என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார். 

Sponsored


பர்வேஸின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ள அப்துல்லா, `முஷாரப்பைப்போல் ஒருவர் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ளது வருத்தமாக இருக்கிறது. பாகிஸ்தானின் ராணுவத்துக்குத் தளபதியாகவும் அந்நாட்டின் அதிபராகவும் இருந்த ஒருவர் இப்படியெல்லாம் பேசியது வருந்தத்தக்க நிகழ்வு. தீவிரவாத அமைப்புகள் அவர்கள் சார்ந்துள்ள நாட்டை மட்டுமல்ல, எந்தெந்த நாடுகளிலெல்லாம் தீவிரவாதம் போற்றப்படுகிறதோ அங்கேயும் ஊடுருவி அழிக்கவல்லது. லஷ்கர்-இ-தய்பா, இஸ்லாமை காக்கப் போகிறதென்று முஷரப் நினைத்தால், அதற்கு பரிதாபப்படுகிறேன். போர்கள் எந்தப் பிரச்னையையும் தீர்த்ததில்லை. அது எந்த முடிவையும் கொடுத்ததுமில்லை' என்று கூறி முஷாரப்பை விமர்சித்துள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored