ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 6 ஆகப் பதிவுஈரானில் இன்று காலை ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கத்தால் அந்நாட்டின் முக்கிய நகரமான கெர்மான் மாகாணம் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.

Sponsored


இன்று காலை 6.32 மணி அளவில் ஈரான் கேர்மான் மாகாணத்தை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. முதலில் ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆகப் பதிவானதாகக் கூறப்பட்டது. பின்னர் அமெரிக்க புவியியல் மையம், நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6 ஆகப் பதிவாகியுள்ளது என திருத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் தென்கிழக்கு ஈரான் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Sponsored


தென்கிழக்கு ஈரானில் இருந்து சுமார் 58 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதிகமாகப் பாதிக்கப்பட்ட கெர்மான் நகரில் 8,21,000 மக்கள் வசித்துவருகிறார்கள். ராணுவப் பாதுகாப்புப் படையினர் கேர்மான் மாகாணத்துக்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் பாதிப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள்குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored