ட்ரம்புக்கு ஒபாமா கூறிய மில்லியன் டாலர் அட்வைஸ்!Sponsoredஅமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளார். 

அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னர் ஒபாமா, இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவர், தன் மனைவி மிஷெல் ஒபாமாவுடன் இணைந்து நடத்தும் ஒபாமா அறக்கட்டளைத் தொடர்பாகப் பல்வேறு நிகழ்ச்சிகளை இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ள தலைநகர் டெல்லி வந்த ஒபாமா, தனியார் பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாடினார். 

Sponsored


அப்போது பேசிய ஒபாமா, ‘சமூக வலைதளங்களை அடிக்கடி பயன்படுத்துபவர்களைவிட அதிக எண்ணிக்கையிலான மக்கள் ட்விட்டரில் என்னைப் பின்தொடருகின்றனர். எனவே, சமூக வலைதளங்களின் ஆற்றலை மனதில் வைத்து, நாம் பதிவிடும் கருத்துகளைக் கவனமாக எடைபோட்ட பின்னரே ஒரு பதிவிட வேண்டும். சமூக வலைதளங்களில் ஒரு பதிவை இடும்முன் நன்கு யோசித்துப் பதிவிட வேண்டும்’ என்றார். ட்விட்டரில் அடிக்கடி கருத்துகளைக் கூறி சர்ச்சையில் சிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பை, ட்விட்டரில் 4.37 கோடி பேர் பின்தொடருகின்றனர். அதேநேரம் ட்விட்டரில் ஒபாமாவைப் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 9.74 கோடியாகும்.     

Sponsored


ட்ரப்பின் பெயரைக் குறிப்பிடாமல் அவருக்கு அறிவுரை கூறிய ஒபாமா, ‘ட்விட்டரில் ஒவ்வொரு முறை பதிவிடும்போதும் உங்கள் பெற்றோர்களை நினைத்துக்கொள்ளுங்கள். நன்கு சிந்தித்த பின்னர் பதிவிடுங்கள். நான் ஒவ்வொரு முறை ட்வீட் செய்யும்போதும் அந்த வாக்கியத்தில் எழுத்துப்பிழை இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வேன். அதேபோல், காலத்தை ஒரு வாக்கியத்தின் இறுதியில் சொல்லக் கூடாது என்பதிலும் நான் விழிப்புடன் இருப்பேன். ஒவ்வொரு முறை ட்வீட் செய்யும் முன்பும், நன்கு சிந்தித்துப் பதிவிட்டால், பின்னர் அதை அழித்துவிட வேண்டிய சூழல் ஏற்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என்றார். ஒபாமாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், ட்விட்டரில் எழுத்துப் பிழையுடன் ட்வீட் செய்து நெட்டிசன்களின் கேலிக்கு உள்ளாவது வாடிக்கையான நிகழ்வாகும். 
 Trending Articles

Sponsored