தலாய் லாமா உடன் ஒபாமா சந்திப்புSponsoredஇந்தியா வந்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தலாய் லாமாவைச் சந்தித்தார்.

அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னர் ஒபாமா, இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவர், தன் மனைவி மிஷெல் ஒபாமாவுடன் இணைந்து நடத்தும் ஒபாமா அறக்கட்டளைத் தொடர்பாகப் பல்வேறு நிகழ்ச்சிகள் இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ள தலைநகர் டெல்லி வந்த ஒபாமா, தனியார் பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாடினார். 

Sponsored


ஒபாமா வருகையையொட்டி பிரதமர் மோடியின் சார்பில் டெல்லியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ”ஒபாமாவை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி” என மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஒபாமா, தனது பொது உரைகளை நிறைவு செய்த பின்னர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி. மேலும், ராகுல் உடனான சந்திப்பிக்குப் பின்னர் புத்த மதத் தலைவரான தலாய் லாமாவையும் ஒபாமா சந்தித்துப் பேசினார்.

Sponsored
Trending Articles

Sponsored