பேச்சுவார்த்தைக்கு மறுக்கும் பாலஸ்தீனம்: எச்சரிக்கும் அமெரிக்கா!Sponsoredஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்துள்ளது பாலஸ்தீனம்.

"ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது. டெல் அவிவ் நகரத்திலிருக்கும் அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமில் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்’, என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், விரைவில் அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றும் வேலைகள் துவங்கும் எனவும் ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், இது இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பிளவை அதிகரித்து போர் மூளும் சூழலை உருவாக்கும் என உலகின் பல பகுதிகளிலிருந்து எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்துள்ளது. 

Sponsored


இந்நிலையில், ஜெருசலேம் விவகாரம்குறித்து அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் பாலஸ்தீன பிரதமர் மஹ்மூத் அப்பாஸ் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பாலஸ்தீனம் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை, ‘பாலஸ்தீனம் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored