லண்டன் உங்களை அன்புடன் வரவேற்கிறது..!Sponsored”லண்டன் தங்களை வரவேற்கிறது” என்ற தனது பரப்புரைக்காக இந்தியா, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார் லண்டன் மேயர் சாதிக் கான்.

லண்டன் மேயர் சாதிக் கான் தனது உயர்மட்டத்தூதுக் குழுவினருடன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் ஆறு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். ’லண்டன் வரவேற்கிறது’ என்ற தனது பிரசார பரப்புரைக்காக இந்தியாவில் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்தவர் நேற்று வாகா எல்லை வழியாக நடந்தே பாகிஸ்தான் சென்றடைந்தார். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இன்று காலை நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசிய சாதிக் கான், ‘இந்தியா- பாகிஸ்தான் இடையே நல்லிணக்கம் உருவாக மத்தியஸ்தம் செய்யத் தயார்’ எனக் கூறினார்.

Sponsored


மேலும் அவர் கூறுகையில், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு லண்டனில் இருந்து ஒரு செய்தி கொண்டுவந்துள்ளேன். அதாவது, லண்டன் நகரம் கல்வி, தொழில் மற்றும் சுற்றுலா என அனைத்து வகையிலும் உங்களை வரவேற்கத் தயாராக இருக்கிறது. லண்டன் இந்து, முஸ்லிம், சீக்கியர் என அனைவருக்கும் மத, இன பேதமின்றி வரவேற்க காத்துக்கொண்டிருக்கிறது. இரண்டு நாட்டின் அரசுகளுக்கு இடையே வேண்டுமானால் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இருநாட்டு மக்களும் ஒருவருக்கொருவர் நல்லெண்ணம் கொண்டே பழகி வருகின்றனர்” என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored