ஈராக்கில் ஐ.எஸ். ஆதிக்கத்துக்கு முடிவு! - போர் முடிந்ததாக பிரதமர் அறிவிப்புSponsoredஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி அறிவித்துள்ளார்.


ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ். இயக்கம் அந்தப் பகுதிகளை தனிநாடாக அறிவித்து ஆட்சி செய்து வந்தது. ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீட்க அந்நாட்டு ராணுவம் போரிட்டு வந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈராக் அரசுக்கு ஆதரவு அளித்து வந்தன. ஐ.எஸ். வசமிருந்த பகுதிகள் படிப்படியாக கைப்பற்றப்பட்டன. ஐ.எஸ். பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த மொசூல் நகரம் சில மாதங்களுக்கு முன்பு மீட்கப்பட்டது. கடைசியாக தல் அபர் நகரம் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்தது. 

இந்நிலையில், தல் அபர் நகருக்குள் புகுந்த ஈராக் ராணுவ வீரர்கள் அந்த நகரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஈராக்கில் ஐ.எஸ். ஆதிக்கத்தை முறியடித்ததற்கு ஈராக் பிரதமருக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. முன்னதாக ஈராக் ராணுவம் ராவா நகரை மீட்டபோது, ஈராக்கில் ஐ.எஸ். ஆதிக்கம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது தான் ஈராக் பிரதமர் முறையான அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored