கலிஃபோர்னியா காட்டுத்தீயில் முயலை மீட்கப் போராடியவர்... வைரல் வீடியோ!Sponsoredஅமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் அண்மையில் பயங்கர காட்டுத்தீ எற்பட்டது. காட்டுத்தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக ஆஸ்கர் கோன்ஸால்ஸ் என்பவர் வேலை முடிந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முயல் ஒன்று  தீ எரிந்துகொண்டிருக்கும் பகுதிக்குள் செல்வதை ஆஸ்கர் கோன்ஸால்ஸ் பார்த்தார். பதறிய அவர் உடனே காரில் இருந்து வெளியே இறங்கி, முயலை மீட்கும் வகையில் கூக்குரல் எழுப்புகிறார். அவரது சத்தத்தைக் கேட்ட முயல் வெளியே வருகிறது. உடனே அதை நெஞ்சோடி வாரி அணைத்தபடி அவர் அந்த இடம்விட்டு நகர்கிறார். அவருடைய இந்தச் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது. அன்பு மனிதர்களுக்கானது மட்டுமல்ல; சக உயிரினங்கள் அனைத்துக்குமானது என்பதை இந்த நிகழ்வு காட்டுவதாக வீடியோவைப் பார்ப்பவர்கள் புகழ்கிறார்கள். அவர் முயலை மீட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகப் பரவி வருகின்றன. முயலை மீட்டது பற்றி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ள ஆஸ்கர், தான் மனிதர்களைப் போலவே மிருகங்களையும் நேசிப்பதாகக் கூறியுள்ளார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored