ஜெருசலேம் விவகாரம்! : ஐ.நா சபையில் அமெரிக்காவுக்கு 'குட்டு!'Sponsoredஸ்ரேல் நாட்டின் தலைநகராக டெல்அவிவ் நகரம் இருந்தது. சமீபத்தில்‘, ஜெருசலேம் நகரை, அந்நாட்டின் தலைநகராக அமெரிக்கா தன்னிச்சையாக அறிவித்தது. ஜெருசலேம், வேறு நாட்டுக்குத் தலைநகராக இருக்கக்கூடாது என்றும் அமெரிக்கா கூறியது. ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேலும் பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடிவரும் நிலையில், அமெரிக்காவின் அறிவிப்பு உலக நாடுகளிடையே குறிப்பாக பாலஸ்தீனத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சில் வெள்ளிக்கிழமை அவசரமாகக் கூடியது.

15 நாடுகள்கொண்ட இந்த அமைப்பில், 8 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரான நிலையில் உள்ளன. நிரந்தர உறுப்பினர்களான பிரிட்டனும் பிரான்ஸும் அமெரிக்காவுக்கு சாதகமாக உள்ளன.  கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. எனினும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள ஐரோப்பிய நாடுகள் ஐந்தும் கூட்டாகச் சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ''இரு நாடுகளுமே ஜெருசலேம் நகரை உரிமை கொண்டாடிவரும் நிலையில், அந்த நாடுகள்தான் பேச்சுவார்த்தை வழியாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேல் உரிமை கொண்டாடுவதை ஏற்க முடியாது'' என்று தெரிவித்துள்ளன.  

Sponsored


மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதி நிக்காலே மெல்டனோவ் கூறுகையில், ''ஜெருசலேம், மதரீதியாகவும் கலாசாரரீதியாகவும் இரு நாடுகளுடன் பின்னிப்பிணைந்த நகரம். அமெரிக்காவின் அறிவிப்பு, இருநாட்டு மக்களுக்குமிடையே வன்முறையை அதிகரிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.  டிரம்ப்பின் அறிவிப்பு, பாலஸ்தீன மக்களிடையே கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தையின் வழியாகவே இந்த விவகாரத்துக்கு முடிவு எட்டப்பட வேண்டும்'' என்றார். 

Sponsored


ஐ.நா-வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹீலே, ''பல ஆண்டு காலமாகவே ஐ.நா. சபை இஸ்ரேல் நாட்டுக்கு விரோதமாகச் செயல்படுவதை வழக்கமாகக்கொண்டுள்ளது'' என்று குற்றம் சாட்டியுள்ளார். Trending Articles

Sponsored