கூட்டு சேர்ந்த அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான்: வடகொரியாவுக்கு சவால்!வடகொரியாவுக்கு சவால்விடும் வகையில் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உடன் இணைந்து இன்று கூட்டுப் போர் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

Sponsored


உலக நாடுகளின் எச்சரிக்கையையும், ஐ.நா-வின் தடைகளையும் மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்துள்ளது. 
இந்த ஏவுகணைச் சோதனைகள், அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா, ஜப்பானுக்கும் எரிச்சலை ஏற்படுத்திவருகிறது. அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இந்த விஷயத்தில் கடும் மோதல் நிலவுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஆகியோர் மாறி மாறி வார்த்தைப் போரில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இந்நிலையில், அமெரிக்கா இன்று தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கூட்டுப் போர் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. நேற்று தொடங்கிய இந்தப் போர் ஒத்திகையில் மூன்று நாடுகளைச் சேர்ந்த கடற்படைகள் பங்கேற்றுள்ளன. போர் கப்பல்கள், ஏவுகணைகள் எனப் பலவாறு போர் சாதனங்கள் உபயோகிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. வடகொரியாவுக்கு சவால்விடுக்கும் வகையிலேயே இந்த மூன்று நாடுகளும் போர் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதால் கொரிய தீபகற்பப் பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored