ட்ரம்ப் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாகவே ஊடகங்களின் முன்பு பதிவு செய்துள்ளனர்.

Sponsored


அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொழிலதிபராக இருந்த காலகட்டத்தில், பல பெண்களுக்கு பாலியல்ரீதியாக தொல்லைகொடுத்துள்ளார் என பாதிக்கப்பட்ட பெண்கள் இணைந்து, பொது வெளியில் குற்றம் சுமத்தினர். பாதிக்கப்பட்ட ரேச்சக் க்ரூக்ஸ் என்பவர் கூறுகையில், “பெண்கள் பணியிடங்களில் பாலியல்ரீதியிலான தொல்லைகளுக்கு உள்ளாகும் சூழல், பல இடங்களிலும் பேதமின்றி நிகழ்கிறது. இந்த வகையில் ட்ரம்ப்பும் குற்றம் சாட்டப்படவேண்டியவர். இந்தக் குற்றச்சாட்டை தற்போது வெளியிடக் காரணம், பல குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய ஒருவர்தான், நம்முடைய அதிபர். இதைப் பொறுத்துக்கொள்ளக் கூடாது” எனக் கூறியுள்ளார்.

Sponsored


மேலும், ரேச்சல் உடன் 2006-ம் ஆண்டின் ’மிஸ் வடக்கு கரோலினா” சமந்தா மற்றும் ஜெசிகா லீட்ஸ் ஆகியோர் இணைந்து பேட்டியில் பங்கேற்றனர். அவர்கள் இருவரும்கூட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாகவே குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வட்டாரம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored