வடகொரியாவுக்கு கூடுதல் நெருக்கடி: மீண்டும் பொருளாதாரத் தடை விதித்தது ஜப்பான்Sponsoredஜப்பான், வடகொரியாவுக்கு மேலும் நெருக்கடி தரும் விதமாக, மீண்டும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியாமீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரியாவை வெளிப்படையாகவே தாக்கிப் பேசினார்.

Sponsored


இந்நிலையில், வடகொரியாமீது ஜப்பான் மீண்டும் பொருளாதாரத் தடை விதிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி வடகொரியாவின் 19 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சொத்துகள் முடக்கப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானின் இந்தப் புதிய நெருக்கடியால், வடகொரியாவின் வங்கிகள், நிலக்கரி மற்றும் தாது வர்த்தகர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்டவை அதிக அளவிலான பாதிப்புகளுக்கு உள்ளாகும் எனக் கூறப்படுகிறது.

Sponsored
Trending Articles

Sponsored