சோவியத் யூனியனின் இரும்பு மனிதன்- ஜோசஃப் ஸ்டாலின் பிறந்ததினம்Sponsoredசோவியத் யூனியனில் அசைக்க முடியா பெரும் சர்வாதிகாரத் தலைவராக இருந்தவர், ஜோசஃப் ஸ்டாலின். இவரின் 139-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

சோவியத் யூனியனில், லெனின் மறைவுக்குப் பின்னர் அசைக்க முடியா தலைவராகத் திகழ்ந்தவர், ஜோசஃப் ஸ்டாலின். பல ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியாத சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த ஸ்டாலினின் தலைமையைக்கொண்ட சோவியத் யூனியன், இரண்டாம் உலகப் போரில் பெற்ற வெற்றிக்குப் பின், உலகின் மிகப் பலம்வாய்ந்த நாடுகளின் பட்டியலில் இணைந்தது. புதிய பொருளாதாரக் கொள்கைகள், சீரமைப்புகள் என ஸ்டாலின் மேற்கொண்ட பல புதிய மாற்றங்கள் சோவியத் யூனியனின் பொருளாதார நிலைப்பாட்டை மேம்படுத்தின.

Sponsored


எந்த அளவுக்கு ஸ்டாலினின் திட்டங்கள் ஒரு பிரிவினரால் போற்றப்பட்டதோ, அதே அளவுக்கு மற்றொரு பிரிவினரால் தூற்றவும்பட்டது. இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருக்கும்போதே, மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார் ஸ்டாலின். புகைப்பழத்துக்கு மிகவும் அடிமையாகிக்கிடந்தார். 1878-ம் ஆண்டு பிறந்த ஸ்டாலின், 1953-ம் ஆண்டு தனது புகைப்பழக்கத்தினாலேயே மரணத்தைத் தழுவினார்.

Sponsored
Trending Articles

Sponsored